Monday 19 March 2012

கிரிக்கெட்டும் நானும் சச்சினின் நூறும்!!


தனது நூறாவது சதத்தை சச்சின் அடித்து கிரிக்கெட் உலகில் ஒரு சாதனையைப் படைத்த போது, என் நினைவுகள் கடந்த கால கிரிக்கெட் உலக முக்கிய நிகழ்வுகளை நினைத்து பின்னோக்கி ஓடின.
1983-ஆம் ஆண்டு. இந்தியா உலகக்கோப்பையை வென்ற நேரம். நாடெங்கும் அமளி துளியாக இருந்தது. அது வரையில் கிரிக்கெட் என்ற விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. தொலைகாட்சியில் நேரடி ஒலிபரப்பில்லாத காலம். வெளியே சென்றிருக்கும்  என் கணவருக்கு ரேடியோவில் அவ்வப்போது கமெண்ட்ரி கேட்டு யார் அவுட், யார் நாட் அவுட் என்று சொல்லியாக வேண்டும். இப்படித்தான் ஓரளவு அதைப்பற்றிய அறிவும் கிடைத்து, ஓரளவு ஈடுபாடும் வந்தது.
அதன் பிறகு ஷார்ஜாவில் 1985-ல் நடந்த ராத்தமன்ஸ் கோப்பை நிறைய ஈடுபாட்டை ஏற்படுத்தி விட்டது. அதே வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த Benson&Hedges world cricket championship போட்டியில் இந்தியா வென்று  ரவி சாஸ்திரி ஆடி காரில் கிரவுண்டை வலம் வந்ததும் உற்சாகம் பீரிட்டது. அன்றிலிருந்து நானும் என் கணவர், மகனுடன் கிரிக்கெட் ஸ்டேடியம் செல்ல ஆரம்பித்தேன். கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்கள் படிப்பதும் அவற்றை சேமித்து வைப்பதும் வீடியோ டேப்புகள் பதிவு செய்து வைப்பதுமாக ஆர்வம் தொடர்ந்தது. ஒரு முறை என் சகோதரி இல்லத்தில் ஒரு ஐந்து வயசு பொடியனுடன் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவன் எனக்கு ‘ மெய்டன் விக்கட்’ என்றால் என்னவென்று சொல்லிக்கொடுத்தான்!! அசந்து விட்டேன் நான்!
ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டக்காரர் என்பதால் ரசிகைகள் கூட்டம் அவரை மொய்க்கும். அவரையும் கவாஸ்கரையும் ஓவியங்களாய் வரைந்து அவர்களிடம் அவற்றில் கையொப்பம் பெற்றது கூட நடந்தது!! இந்த இடத்தில் ஷார்ஜா கிரிக்கெட்டைப்பற்றி சில வார்த்தைகள் அவசியம் சொல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், என்று பல நாடுகள் கலந்து கொண்டாலும் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த விளையாட்டுக்கள் மட்டிலும்தான் முக்கியத்துவம் அதிகமாய் பெறும். இது விளையாட்டு என்பதையும் கடந்து தேசிய உணர்வுகள் இரு பக்கமும் கொழுந்து விட்டெரியும். ஒரு இந்தியர் அவுட் ஆனால் போதும், உடனே பாகிஸ்தான் ரசிகர்கள் தட்டு நிறைய இனிப்புக்கள், கேக்குகள் எடுத்துக்கொண்டு ஓடி வந்து நமக்கு கட்டாயமாகக் கொடுப்பார்கள். அல்லது கர்சிப் கொண்டு வந்து தருவார்கள்.[ நாம் அழுகிறோமாம்! கண்களைத் துடைத்துக்கொள்ளத் தருகிறார்களாம்! ] இந்தியர்கள் இதை எதுவுமே செய்யாமல் அமைதியாக ரசிப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக இருப்பார்கள். நாங்கள் மட்டுமல்ல, சுற்றுப்புற நண்பர்கள் கூட்டம் எல்லாமே, காலையிலேயே சாப்பாட்டு பொட்டலங்களை கட்டிக்கொண்டு ஸ்டேடியத்திற்கு ஆஜராகி விடுவோம். ஒரு முறை பச்சைப்புடவை கட்டிக்கொண்டு சென்ற போது நம் நண்பர்கள் எல்லாம் ‘நீங்கள் இப்படிப்பட்ட உடையில் வரலாமா? என்று ஆதங்கமே பட்டு விட்டார்கள். [ பாகிஸ்தானியரின் கொடி நிறம் பச்சை என்பதால் அவர்களையே நம்மவர்கள் பச்சை என்று தான் குறிப்பிடுவார்கள் எப்போதுமே! ] கிரிக்கெட்டை ரசித்து மகிழ்ந்த காலம் அவை!!

1989 ஆம் ஆண்டு, முதன் முதலாக சச்சின் அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்ரீகாந்துடன் அவர் அதிரடியாக விளையாண்ட போது, அந்த 16 வயது இளைஞரைப்பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனஸின் பந்து வாயில் பட்டு இரத்தக்காயமேற்படுத்தியபோதும் தைரியமாக வந்து விளையாடிய அவரைப்பார்த்து பாகிஸ்தானிய வீரர்கள் அசந்து போனார்கள், நானும் தான்! 1990-ல் இங்கிலாந்தில் டெஸ்ட் மாட்சில் தனியொரு ஆளாய் சதம் அடித்து இந்தியா தோற்றுப்போகாமல் காப்பாற்றிய அவரைப்பார்த்து இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் ‘ what a seventeen!!’ என்று அதிசயித்த போது பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அன்றைக்கு உயரத்தில் ஏறத்தொடர்ந்த அவரின் ஆட்டம் இத்தனை வருடங்களில் பல உலக சாதனைகளைப் படைத்து மிகுந்த உயரத்திலேயே இன்னும் இருக்கிறது!
1999-ல் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்தபோது, அவர் தந்தை இறந்து போனார். உடனே மும்பை சென்று தந்தைக்கான காரியங்களை முடித்துத் திரும்பி அடுத்த மாட்சில் அவர் விளையாடியபோது உலகமே அவரை மிகவும் மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தது!

1991-ல் ஷார்ஜாவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியில் அம்பயரின் தவறான கணிப்பில் பாகிஸ்தான் வென்றது. மாட்ச் ஃபிக்ஸிங் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்ப்ட்டன. அதன் பின் சச்சின் ஷார்ஜா வந்து விளையாட மறுத்து விட்டதால் அது வரையில் கிரிக்கெட்டின் கனவுலகமாக இருந்து வந்த ஷார்ஜா மெல்ல மெல்ல மறக்கப்பட ஆரம்பித்தது. 1998-ல் மீண்டும் பல வருடங்களுக்குப்பின் சச்சின் விளையாட வந்து புயல்போல ஆடி ஆஸ்திரேலியாவை ஜெயித்து இந்தியாவிற்கு பெருமையூட்டினார். ஆனாலும் 2001-ல் இந்திய அரசாங்கம் ஷார்ஜாவில் அப்போது நடக்கவிருந்த ஷார்ஜா கப் போட்டியில் இந்திய வீரர்கள் வந்து விளையாட தடை விதிக்கவே அப்போது கீழே விழ ஆரம்பித்த ஷார்ஜா கிரிக்கெட் அதன் பின் எழவில்லை.
அதன் பின் இந்திய கிரிக்கெட் உலகில் வெகுவாக பேசப்பட்ட மாட்ச் ஃபிக்ஸிங், முன்னாள் காப்டன் அசருதீன் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது, எப்போது தோற்றலும் இந்தியா காசு வாங்கிக்கொண்டு தோற்றது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கள் என்று தொடர்ந்து வந்த தேக்கங்கள் என் ஈடுபாட்டை மெல்ல மெல்ல குறைத்தது. 2003ல் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையில் ஃபைனல் ஆட்டத்திற்கு வந்தது. கிரிக்கெட் ஜுரத்தில் இந்தியா மூழ்கியிருந்தபோது, கங்குலி செய்த சொதப்பலால் இந்தியா பரிதாபமாகத் தோற்ரது. வெறுத்துப்போன நான் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். 10 வருடங்களுக்குப்பின் ஒரு கிரிக்கெட் மாட்சை முழுமையாக அமர்ந்து நான் பார்த்தது சச்சின் தன் 100ஆவது சதம் அடித்த போது தான்!
எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் இந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் ஆராதித்ததில்லை. எந்த ஒரு வீரரும் மற்ற நாட்டு பந்து வீச்சாளர்களை இந்த அளவிற்கு திணற வைத்ததில்லை. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும்  ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும்போது சதம் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

அளவு கடந்த சாதனைகளும் அதிக செல்வமும் அவரை வந்தடைந்த போதும் அவர் என்றும் நிதானமிழக்காத, மற்றவர்களை ஒரு போதும் குறை சொல்லாத, நேயமுள்ள ஒரு நல்ல மனிதனாகவே அவர் இருந்து வருகிறார்.

அவர் சாதனைகளுக்காகவே விளையாடுகிறார் என்று சில தரப்புகள் குற்றச்சாட்டுகளையும் அடிக்கடி எழுப்புகின்றன. அதற்கு பாகிஸ்தானின் முந்தைய காப்டன் மியாண்டாட் பதில் சொன்னார்.
“ சச்சின் சாதனைகளுக்காக விளையாடுபவர் அல்ல. அப்படியே அவர் சாதனைகளுக்காக விளையாடினாலும் தப்பில்லை. ஒரு கிரிக்கெட்டர் சாதரணமாய் ரன்களைக் குவிக்கும்போது மக்கள் மனதில் அவர் நிற்பதில்லை. மறக்கப்படுகிறார். சாதனைகள் மட்டும்தான் ஒரு மனிதனை அவன் காலத்திற்குப்பின்னும் அவனை மக்கள் மனதில் புகழுடன் நிற்க வைக்கிறது ”! 
புகழுக்காகவும் பணத்திற்காகவும் பலர் விளையாடும் இந்த விளையாட்டில் அதை மிகவும் நேசிக்கும் காரணத்தால் மட்டுமே சச்சினால் இன்னும் இன்று வரையிலும் அதை சிறப்பாக விளையாட முடிகிறது. அந்த தாகமும் நேசமும் என்று குறைகிறதோ, அன்று கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என்று அவரே சொல்லியிருக்கிறார். வேறெந்த விளையாட்டிலும் உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா சோபித்ததில்லை. இன்று கிரிக்கெட் உலக அரங்கில் இந்தியாவிற்கு தனியான கெளரவத்தையும் மரியாதையும் கொடுத்திருக்கும் அவரை இன்னும் சில காலம் விளையாட அனுமதிப்பதன் மூலம் நாமும் பதில் மரியாதை தரலாமே?

HATS OFF TO SACHIN TENDULKAR!!    

32 comments:

middleclassmadhavi said...

Kandippaga aadharavu undu!

Sachin tharappu alasal aparam!

தமிழ் உதயம் said...

இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் கிடைத்த தொடர் தோல்விகளால் - கிரிக்கெட் மீது சற்றே எரிச்சல் பட்டிருந்த ஜனங்களை - சச்சினின் சதம் சுவராசியப்படுத்தி உள்ளது. வாழ்த்துகள் சச்சின்.

ஸாதிகா said...

வேறெந்த விளையாட்டிலும் உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா சோபித்ததில்லை. இன்று கிரிக்கெட் உலக அரங்கில் இந்தியாவிற்கு தனியான கெளரவத்தையும் மரியாதையும் கொடுத்திருக்கும் அவரை இன்னும் சில காலம் விளையாட அனுமதிப்பதன் மூலம் நாமும் பதில் மரியாதை தரலாமே?///கண்டிப்பாக.


அருமையான கணிப்பும் அருமையான அலசலும்.

ரிஷபன் said...

எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் இந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் ஆராதித்ததில்லை. எந்த ஒரு வீரரும் மற்ற நாட்டு பந்து வீச்சாளர்களை இந்த அளவிற்கு திணற வைத்ததில்லை. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும்போது சதம் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.


அருமையான கணிப்பு!

Marc said...

சச்சினை பற்றி யாரும் பேச தேவையில்லை.அவருக்கு தெரியும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வேறெந்த விளையாட்டிலும் உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா சோபித்ததில்லை. இன்று கிரிக்கெட் உலக அரங்கில் இந்தியாவிற்கு தனியான கெளரவத்தையும் மரியாதையும் கொடுத்திருக்கும் அவரை இன்னும் சில காலம் விளையாட அனுமதிப்பதன் மூலம் நாமும் பதில் மரியாதை தரலாமே?//

நிச்சயமாக அனுமதிக்கத்தான் வேண்டும். அருமையான அலசல் பதிவு. பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

அருமையான அலசல். சச்சினுக்கு நிச்சயம் ஆதரவு தரலாம்.

எனக்கு இதுவரை கிரிகெட்டின் மீது ஆர்வம் இல்லை. உங்களைப் போல் ஏதாவது சந்தர்ப்பம் அமைந்தால் வருமோ என்னவோ....

Asiya Omar said...

நல்ல அலசல்.மனோ அக்கா.தலைப்பு சூப்பர்.

CS. Mohan Kumar said...

பெண்களில் பலருக்கும் கிரிக்கெட்டில் விருப்பம் இருப்பதில்லை. உங்களுக்கு இந்த அளவு ஆர்வம் இருப்பது ஆச்சரியமா இருக்கு

Menaga Sathia said...

சுவராஸமான பதிவு,சச்சினுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

சச்சினின் சதம்... நானும் பார்த்தேன்..... ரசித்தேன்....

அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பு... அப்பப்பா....

இராஜராஜேஸ்வரி said...

சாதனைகள் மட்டும்தான் ஒரு மனிதனை அவன் காலத்திற்குப்பின்னும் அவனை மக்கள் மனதில் புகழுடன் நிற்க வைக்கிறது ”!

சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

kowsy said...

அருமையான பதிவு . நல்ல அலசல்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அம்மா.
சச்சின்... சச்சின் தான்.

ஸ்ரீராம். said...

மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருக்கிறீர்கள். வருட வாரியாக நல்ல அலசல். சச்சினைப் போல நாடு, மொழி வித்தியாசமி இல்லாமல் எல்லோர் மனத்தைக் கொள்ளை கொண்டவர் வேறு எவருமில்லை.

[இணையக் கோளாறு சதி செய்ததால் இரண்டாம் முறையும் பின்னூட்டத்தை இடுகிறேன் - முதல் முறை வெளியிடப் பட்டதா இல்லையா என்று தெரியாததால்...! ஒன்றை மட்டும் அப்ரூவ் செய்யவும்! :))]

மனோ சாமிநாதன் said...

பாராட்டி பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றி மாதவி!

மனோ சாமிநாதன் said...

இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதலுடன் கருத்துரை சொன்னதற்கு இனிய நன்றி சகோதரர் ரிஷபன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி தனசேகர்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஆதி! வீட்டில் குழந்தைக‌ள் உள்பட எல்லோருக்கும் ஆர்வம் இருந்தால் நமக்கும் அதில் ஆர்வம் வந்து விடும்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

இங்கு ஷார்ஜா கிரிக்கெட்டைப் பார்த்திருந்தீர்களென்றால் கிரிக்கெட் ஆர்வம் எத்தனை பெண்களை இழுத்து வந்திருந்தது என்பதை அறிந்திருப்பீர்கள் மோகன்குமார்! என் ஆர்வம் எல்லாம் 10 வருடங்களுக்கு முன் வெகுவாகக்குறைந்து விட்டது!

Vijiskitchencreations said...

மிக அருமையாக எழுதியிருக்கிங்க.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சந்திரகெளரி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!